

புதுடெல்லி,
குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் வரும் 26 ஆம் தேதி முப்படைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) தயாரித்த தேஜஸ் இலகு ரக போர் விமானங்களுக்கான சென்சார்கள், ஏவுகணைகள், எலக்ட்ரானிக் கருவிகள், நீர்மூழ்கி கப்பல்களுக்கான இயந்திரங்கள் ஆகியவை 2 அலங்கார ஊர்திகளில் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
முதல் அலங்கார ஊர்தியில் நவீன எலக்ட்ரானிக் ரேடார் உத்தம், அஸ்த்ரா, ருத்ரம் என்ற ஏவுகணைகள் உள்பட 5 வகையான ஆயுதங்கள், ஜாமர் கருவி ஆகியவை இடம்பெறுகின்றன. இரண்டாவது அலங்கார ஊர்தியில் நீர்மூழ்கி கப்பல்களை இயக்க பயன்படும் காற்று தேவையில்லாத இயந்திர அமைப்பு, ஏ.ஐ.பி. சிஸ்டம் இடம்பெறுகிறது. இந்த வகை தொழில்நுட்பம் உலகின் ஒரு சில நாடுகளிடம் மட்டுமே உள்ளது. உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் துறையினருடன் இணைந்து இந்த தொழில்நுட்பத்தை டி.ஆர்.டி.ஓ உருவாக்கியுள்ளது.