

சூரத்,
குஜராத் மாநிலத்தில், சூரத் அருகே நியோல் சோதனை சாவடியில், போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். மும்பையில் இருந்து வந்த ஒரு பஸ்சை சோதனையிட்டபோது, அந்த பஸ்சில் பயணம் செய்த ஒரு பயணியிடம் இருந்து ஏறத்தாழ ரூ.1 கோடி (ரூ.99 லட்சத்து 95 ஆயிரம்) பழைய கிழிந்த ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அந்த பயணியிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அவரது பெயர் வினோத் ஷா என்பது தெரியவந்தது. மும்பையை சேர்ந்த ஒருவர், குஜராத்தில் உள்ள வியாபாரியிடம் இந்த பணத்தை கொடுக்க சொன்னதாக அவர் போலீசாரிடம் தெரிவித்து இருக்கிறார். மேற்கொண்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.