சி.பி.ஐ. சிறப்பு இயக்குநர் நியமனத்தினை எதிர்த்து வழக்கு; நவம்பர் 13ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

சி.பி.ஐ.யின் சிறப்பு இயக்குநராக ஐ.பி.எஸ். அதிகாரி ராகேஷ் ஆஸ்தானா நியமிக்கப்பட்டதற்கு எதிரான மனுவை சுப்ரீம் கோர்ட்டு நவம்பர் 13ந்தேதி விசாரணைக்கு எடுத்து கொள்கிறது.
சி.பி.ஐ. சிறப்பு இயக்குநர் நியமனத்தினை எதிர்த்து வழக்கு; நவம்பர் 13ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
Published on

சி.பி.ஐ.யின் கூடுதல் இயக்குநராக இருந்தவர் ஐ.பி.எஸ். அதிகாரி ராகேஷ் ஆஸ்தானா. இவர் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் என்ற வெளிநாட்டு நிறுவனத்தின் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு போன்ற உயர்மட்ட அளவிலான வழக்குகளை பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் சி.பி.ஐ.யின் சிறப்பு இயக்குநராக ராகேஷ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதனால் சி.பி.ஐ.யின் இயக்குநர் அலோக் வர்மாவுக்கு அடுத்து, 2வது நிலை அந்தஸ்தினை அவர் பெற்றுள்ளார்.

கடந்த வருடம் டிசம்பர் 2ந்தேதி இயக்குநர் அனில் சின்ஹா ஓய்வு பெற்ற பின் இடைக்கால இயக்குநராக ராகேஷ் பதவி வகித்துள்ளார். கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரியில் கோத்ரா நகரில் சபர்மதி எக்ஸ்பிரெஸ் ரெயில் எரிப்பு சம்பவத்தில் மாநில சிறப்பு புலனாய்வு கழகத்தின் தலைவராகவும் செயல்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் சி.பி.ஐ.யின் சிறப்பு இயக்குநராக ஐ.பி.எஸ். அதிகாரியான ராகேஷ் ஆஸ்தானா நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இந்த நியமனத்தினை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

அதில், சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வரும் ஒரு வழக்கில் ராகேஷின் பெயரும் உள்ளது. விசாரணை முடிவடையாத நிலையில் அவரை சி.பி.ஐ.யில் இருந்து வெளியேற்ற மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சி.பி.ஐ. இயக்குநரின் ஆலோசனையை மீறி அரசு மற்றும் தேர்வு குழு செயல்பட்டு உள்ளது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த மனு நவம்பர் 13ந்தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com