

ஜம்மு,
ஜம்மு காஷ்மீரின் உதாம்பூர் நகரில் சந்தேக நபர்கள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, குறிப்பிட்ட இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது, வரை எந்த ஒரு நபரும் கைது செய்யப்படவில்லை எனவும் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடப்பதாகவும் பாதுகாப்பு படையினர் தரப்பில் சொல்லப்படுகிறது.