கேரளாவில் இன்று 2-வது நாளாக முழு ஊரடங்கு அமல்

கேரளாவில் நேற்றும், இன்றும் 2 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கேரளாவில் இன்று 2-வது நாளாக முழு ஊரடங்கு அமல்
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்றைய தினம் கேரளாவில் 13,832 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 18,172 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஏற்கனவே கேரளாவில் வரும் 16 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் நேற்றும், இன்றும் 2 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகள் இன்றி பொதுமக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவகங்களில் பார்சல் வழங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், உணவை நேரடியாக சென்று விநியோகிக்கும் பணி மட்டுமே நடைபெறுகிறது. இதனால் மாநிலம் முழுவதும் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com