சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்திற்கு அமலாக்கத்துறை திடீர் சம்மன்: இன்று ஆஜராக உத்தரவு

சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்திற்கு அமலாக்கத்துறை திடீர் சம்மன் அனுப்பி உள்ளது. அதன்படி இன்று அவர் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மும்பை,

சிவசேனா மந்திரி ஏக்நாத் ஷிண்டே, கட்சி தலைமைக்கு எதிராக ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அசாமில் உள்ள ஓட்டலில் முகாமிட்டு உள்ளார். இதற்கிடையே சிவசேனாவை சேர்ந்த சஞ்சய் ராவத் எம்.பி., முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாகவும், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராகவும் கடுமையாக பேசி வருகிறார்.

இந்தநிலையில் அமலாக்கத்துறை பத்ரா சால் முறைகேடு வழக்கில் சஞ்சய் ராவத்திற்கு திடீரென சம்மன் அனுப்பி உள்ளது. அதில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு உள்ளது.

மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள பத்ரா குடிசை சீரமைப்பு பணியில் ஈடுபட்ட ஜி.ஏ.சி.பி.எல். நிறுவனம் ரூ.1,039 கோடி மோசடியில் ஈடுபட்டதாகவும், அதில் ரூ.100 கோடியை பிரவின் ராவத் என்பவர் சஞ்சய் ராவத் குடும்பத்தினர் உள்ளிட்ட பலரின் வங்கி கணக்கிற்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரிக்க அமலாக்கத்துறை சஞ்சய் ராவத்திற்கு சம்மன் அனுப்பி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com