

புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைவரை நியமிக்க வேண்டும், கட்சியில் பல்வேறு சீர் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர், சோனியா காந்திக்கு கடிதம் எழுதி இருந்தனர். '
காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் காணொலி காட்சி வாயிலாக இன்று நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் இந்த விவகாரம் அனலை கிளப்பியது என்றே சொல்லாம்.
7 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தியே நீடிப்பார் என முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. அடுத்த 6 மாதத்திற்குள் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.