முலாயம் சிங்கிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் - ஜனாதிபதிக்கு கடிதம்

முலாயம் சிங்கிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென ஜனாதிபதிக்கு சமாஜ்வாதி கட்சி கடிதம் எழுதியுள்ளது.
முலாயம் சிங்கிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் - ஜனாதிபதிக்கு கடிதம்
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியை உருவாக்கியவர் முலாயம் சிங் யாதவ். இவர் 3 முறை உத்தரபிரதேச முதல்-மந்திரியாகவும், 1 முறை மத்திய பாதுகாப்புத்துறை மந்திரியாகவும் செயல்பட்டுள்ளார்.

இதனிடையே, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முலாயம் சிங் கடந்த திங்கட்கிழமை தனது 82 வயதில் மரணமடைந்தார். அவரது மரணத்திற்கு ஜனாதிபதி, பிரதமர், அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்தனர். முலாயம் சிங்கின் உடல் உத்தரபிரதேசத்தின் சைபி நகரில் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், முலாயம் சிங்கிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென ஜனாதிபதிக்கு சமாஜ்வாதி கட்சி கடிதம் எழுதியுள்ளது. ஆக்ரோ - லக்னோ எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெயரை தர்டிபுத்ரா முலாயம் சிங் யாதவ் எக்ஸ்பிரஸ் ரெயில் என பெயர் மாற்ற வேண்டுமென சமாஜ்வாதி கட்சி செய்தித்தொடர்பாளர் ஐபி சிங் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com