

கிரேட்டர் நொய்டா,
உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா நகரில் 39வது பட்டாலியனில் வருடாந்திர அணிவகுப்பு நடந்தது. இதில், ஸ்னோயி என்ற நாய் மற்றும் சாம்பியன் என்ற குதிரைக்கு சிறந்த முறையில் சேவையாற்றியதற்காக, டி.ஜி. சஞ்சய் அரோரா சிறப்பு விருதுகளை வழங்கியுள்ளார்.
சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டறியும் பணியில் ஈடுபட்டு, சரியான தருணத்தில் அவற்றை கண்டறிந்து பலரது உயிரை 8 வயதுடைய ஸ்நோயி காப்பாற்றியுள்ளது.