கொரோனாவால் இறந்தோரின் உடல்கள் மாறின; இரு சமூகத்தினர் போராட்டம்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனாவால் இறந்த இருவரது உடல்கள் மாற்றி கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரு சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனாவால் இறந்தோரின் உடல்கள் மாறின; இரு சமூகத்தினர் போராட்டம்
Published on

புதுடெல்லி,

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களில் யாரேனும் இறந்து விட்டால், உடலை கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்து, முழுவதும் மூடப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்.

ஆனால், உயிரிழந்தவரை காண அவர்களுக்கு அனுமதி கிடையாது. எனினும் விதிகளின்படி, உயிரிழந்தவர்களின் அடையாளம் பற்றிய விவரங்கள் குடும்பத்தினரிடம் அளிக்கப்படும். அந்த பட்டியலை அவர்கள் சரிபார்த்து கொள்ள வேண்டும்.

இதுபோன்று நேற்று இரு உடல்கள் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. முதலில் ஒரு குடும்பத்தினர் உடலின் இறுதி சடங்குகளை செய்து முடித்து விட்டனர். இரண்டாவது குடும்பத்தினரிடம், சற்று காத்திருக்கும்படியும், சரியான உடலை பெற்று கொண்டீர்களா? என சரிபார்த்து கொள்ளும்படியும் கூறப்பட்டு உள்ளது.

இதில் உடல்கள் மாற்றி கொடுக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இதனால் இரு சமூகத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களை சமரசப்படுத்தி எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

துரதிர்ஷ்டவச முறையில் நடந்த இந்த சம்பவத்தில் தொடர்புடைய பிணவறை ஊழியர்கள் இருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது என மூத்த அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com