உத்தரபிரதேசத்தில் ஜிகா வைரசை கட்டுப்படுத்த மத்திய குழு விரைந்தது

உத்தரபிரதேசத்தில் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது.
உத்தரபிரதேசத்தில் ஜிகா வைரசை கட்டுப்படுத்த மத்திய குழு விரைந்தது
Published on

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் 57 வயதான ஆண் ஒருவருக்கு ஜிகா வைரஸ் தாக்கி இருப்பது உறுதியாகி உள்ளது. பாதிக்கப்பட்டவர் மாநிலத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், பல்துறை நிபுணர்கள் அடங்கிய உயர்மட்ட குழுவை மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரபிரதேசத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. பூச்சியியல் நிபுணர், பொது சுகாதார நிபுணர்கள், மகப்பேறு மருத்துவ நிபுணர், தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம், டெல்லி ராம்மனோகர் லோகியா ஆஸ்பத்திரி ஆகியவற்றை சேர்ந்த நிபுணர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இக்குழுவினர், கான்பூரில் கள நிலவரத்தை ஆராய்வார்கள். மாநில சுகாதாரத்துறையுடன் இணைந்து செயல்படுவார்கள். ஜிகா வைரசை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய பொது சுகாதார நடவடிக்கைகளை பரிந்துரைப்பார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com