மகாவிகாஸ் அகாடி கட்சிகள் அடுத்த தேர்தல்களில் கூட்டணி அமைப்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை: தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக்

மகாவிகாஸ் அகாடி கட்சிகள் அடுத்த சட்டசபை, நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படவில்லை என தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறியுள்ளார்.
மகாவிகாஸ் அகாடி கட்சிகள் அடுத்த தேர்தல்களில் கூட்டணி அமைப்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை: தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக்
Published on

காங்கிரஸ் தனித்து போட்டி

மராட்டியத்தில் சிவசேனா தலைமையில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சியை நடத்தி வருகின்றன. இந்த கூட்டணி மகாவிகாஸ் அகாடி என அழைக்கப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் அமராவதியில் நடந்த கூட்டத்தில் பேசிய நானா பட்டோலே, அடுத்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெறும் என்றார். மேலும் அவர் காங்கிரசின் சித்தாந்தம் தான் நாட்டை காக்கும் என்றார்.இதேபோல காங்கிரஸ் மூத்த தலைவர் நசீம் கானும், காங்கிரஸ் தேர்தல்களில் தனித்து போட்டியிட்டால் அது கட்சிக்கு பலனை தரும் என்றார்.

முடிவு எடுக்கப்படவில்லை

இந்தநிலையில் வரும் சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல்களில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து மகாவிகாஸ் அகாடி அரசில் உள்ள கட்சிகள் எந்த முடிவையும் எடுக்கவில்லை என தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மந்திரி நவாப் மாலிக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே வரும் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என கூறியுள்ளார். அவர் முதல்-மந்திரி ஆக வேண்டும் என விரும்புகிறார். எந்த பதவிக்கும், யாரும் விருப்பப்படலாம். எல்லா கட்சிகளும், கட்சியை பலப்படுத்தவும், தொண்டர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்க உழைக்கும். வரும் உள்ளாட்சி தேர்தல்களில் 3 கட்சிகளும் இணைந்து போட்டியிடலாம். 3-ல் 2 கட்சிகள் கூட கூட்டணி அமைக்கலாம். அப்போது உள்ள சூழலை பொறுத்து முடிவு எடுக்கப்படும். மக்களின் நலனை கருத்தில் கொண்டு தற்போது 3 கட்சிகளும் ஒருங்கிணைந்து ஆட்சி நடத் வருகிறது. 2024-ல் நடைபெற உள்ள தேர்தல்களில் கூட்டணி அமைப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com