சொகுசு காருக்குள் வைத்து சிறுமி பாலியல் பலாத்காரம் சிறுவன் - எம்.எல்.ஏ மகன் உள்பட 4 பேர் கைது-

சொகுசு காருக்குள் வைத்து சிறுமி பாலியல் பலாத்காரம் சிறுவன் மற்றும் எம்.எல்.ஏ மகன் உள்பட 4 பேர் கைதுசெயயப்பட்டு அவர்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சொகுசு காருக்குள் வைத்து சிறுமி பாலியல் பலாத்காரம் சிறுவன் - எம்.எல்.ஏ மகன் உள்பட 4 பேர் கைது-
Published on

ஐதராபாத்

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் சிறுமியை சொகுசு காருக்குக்குள் வைத்து கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படும் வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவத்தில் பல முக்கிய பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.எனினும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸில் சிறுமி ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு சிறுமி திரும்பிய போது இந்த சம்பவம் நிகழ்ந்து உள்ளது. இந்த பலாத்கார சம்பவத்தில் நான்கு பேர் ஈடுபட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரும் சிறுவர் ஆவார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் எம்எல்ஏவின் மகனும் உள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை சார்பில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

எம்.எல்.ஏ.வின் மகனும் சிறுபான்மை வாரியத் தலைவரும் இந்த விருந்தில் கலந்துகொண்டதாகவும் சிறுமியுடன் இருந்ததாகவும் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர்தெரிவித்தார்.

போலீசார் போக்சோ சட்டத்தின் பிரிவு 354 இன் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர். பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com