

இந்தநிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது:-
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விலைவாசி அதிகரித்து வருகிறது. விலைவாசி உயர்வால் வளர்ச்சி பாதிக்கும். கச்சா எண்ணெய் விலை மிகவும் சவாலாக இருக்கிறது. அதன் விலையை நியாயமானதாக நிர்ணயிக்க வேண்டும் என்று எண்ணெய் உற்பத்தி நாட்டு நண்பர்களை பல தடவை வற்புறுத்தி விட்டேன். ஓபெக் (எண்ணெய் உற்பத்தி நாடுகள் கூட்டமைப்பு) கூட்டம், ஜூலை 1-ந்தேதி (நாளை) நடக்கிறது. அதில், விலை சற்று குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.