

புதுடெல்லி,
நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ந்தேதி தொடங்கி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. 100 கோடி தடுப்பூசி இலக்கை எட்டி இந்தியா சாதனை படைத்து உள்ளது.
இந்த நிலையில், மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி செய்தியாளர்களிடம் கூறும்போது, உலகம் முழுவதும் 700 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. அவற்றில் இந்தியா 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை செலுத்தியுள்ளது.
இவற்றில் இந்தியாவில் 2வது டோஸ் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 31% ஆகும் என கூறியுள்ளார்.