

புதுடெல்லி,
மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்க சாவடிகளிலும் வாகனங்கள் செல்லும் அனைத்து பாதைகளையும் டிசம்பர் 1-ந் தேதி முதல் விரைவு பாதையாக மாற்ற வேண்டும். இதற்காக மின்னணு முறையில் கட்டணம் வசூலித்து விரைவாக வாகனங்களை அனுப்புவதால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று தெரிவித்துள்ளது.