செல்போன் பயன்படுத்தியதை கண்டித்த தந்தையை கொன்ற மகன்

செல்போன் பயன்படுத்தியதை கண்டித்த தந்தையை அவரது மகனே கொன்ற சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
செல்போன் பயன்படுத்தியதை கண்டித்த தந்தையை கொன்ற மகன்
Published on

பெலகாவி,

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள காகாத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரப்பா கும்பார் (வயது 60). போலீஸ் துறையில் வேலை பார்த்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். அவருடைய மகன் ரகுவீர் (25). இவர் எப்போதும் செல்போன் கையுமாக திரிவார். செல்போனை அதிகமாக பயன்படுத்தியதை அவரது தந்தை கண்டித்து வந்துள்ளார். இந்தபிரச்சினையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தந்தை, மகன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரகுவீர் கல்லால் எறிந்ததில் பக்கத்து வீட்டின் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. இதனால் அவர்கள் போலீசில் புகார் செய்ததால் ரகுவீரை போலீசார் அழைத்து அறிவுரை வழங்கி எச்சரித்து அனுப்பினர்.

இந்த நிலையில் ரகுவீர் செல்போனிற்கு ரீசார்ஜ் செய்வதற்காக தந்தையிடம் பணம் கேட்டு நச்சரிக்க தொடங்கினார். இதற்கு அவரின் தந்தை பணம் கொடுக்க மறுத்து உள்ளார். இதனால் கோபமடைந்த ரகுவீர் அவரது தந்தையை அடித்து கொலை செய்தார். கொலை செய்த பின்னரும் திருப்தி அடையாததால் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி எறிந்தார். அதற்கு முன்னர் ரகுவீர் தன் தாயை இன்னொரு அறையில் வைத்து பூட்டி இருந்தார். அவர் அபயக்குரல் எழுப்பி அக்கம்பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்து போலீசாரை வரவழைத்தார். உடனே போலீசார் வீட்டிற்கு விரைந்து வந்து ரகுவீரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com