சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற வியாபாரி வீட்டில் நகை, பணம் திருட்டு

சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற வியாபாரி வீட்டில் நகை, பணம் திருட்டு போயுள்ளது.
சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற வியாபாரி வீட்டில் நகை, பணம் திருட்டு
Published on

பெங்களூரு: கதக் (மாவட்டம்)டவுன் சித்தலிங்கபுரா பகுதியில் வசித்து வருபவர் பசவராஜ். இவர் வியாபாரி ஆவார். இந்த நிலையில் நேற்று சித்தலிங்கபுரா பகுதியில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதில் பசவராஜும், அவரது குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட மர்மநபர்கள் பசவராஜுன் வீட்டின் கதவை திறந்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் பீரோவில் இருந்த 250 கிராம் தங்க நகைகள், ரூ.5 லட்சம் ரொக்கத்தை திருடிவிட்டு தப்பி சென்று விட்டனர். இந்த திருட்டு சம்பவம் குறித்த புகாரின்பேரில் கதக் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com