பணத்தை மேம்பாலத்தில் இருந்து வாரி வாரி இறைத்த வள்ளல்: கீழே விழுந்த ரூபாய் நோட்டுகளை அள்ளி எடுக்க முட்டி மோதிய மக்கள்...!

அவ்வழியே வாகனத்தில் வந்தவர்களும் வாகனத்தை அப்படியே போட்டு விட்டு ரூபாய் நோட்டுகளை எடுக்க முயன்றனர்.
பணத்தை மேம்பாலத்தில் இருந்து வாரி வாரி இறைத்த வள்ளல்: கீழே விழுந்த ரூபாய் நோட்டுகளை அள்ளி எடுக்க முட்டி மோதிய மக்கள்...!
Published on

பெங்களூரு,

திரைப்படங்களில் வரும் காட்சி பேல், கர்நாடக மாநிலம், பெங்களூரில் மேம்பாலம் ஒன்றின் மீது ஏறி திடீரென தன்னிடம் இருந்து 10 ரூபாய் நேட்டுகளை கோர்ட் சூட் அணிந்த நபர் ஒருவர் கீழே வீசி எறிந்தார்.

இதை சற்றும் எதிர்பாராத அப்பகுதியில் இருந்தவர்கள் ரூபாய் நேட்டுகளை கைகளில் பிடிக்கவும், கீழே இருந்த ரூபாய் நேட்டுகளை அள்ளி எடுக்கவும் முயன்றனர்.

அவ்வழியே வாகனத்தில் வந்தவர்களும் வாகனத்தை அப்படியே போட்டு விட்டு ரூபாய் நேட்டுகளை எடுக்க முயன்றனர்.

பெங்களூரின் கே.ஆர்.மார்கெட் மேம்பாலம் இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக முடங்கியது. இரு சக்கர வாகனத்தில் வந்த அந்த நபர் திடீரென மேம்பாலத்தின் ஓரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு கையில் வைத்திருந்த பையில் இருந்து ரூபாய் நேட்டுகளை எடுத்து வீசத் தெடங்கினார். இந்த வீடியே சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தச் சம்பவத்தைத் தெடர்ந்து பேலீசார் அந்த நபரை பிடிக்க முயன்றனர். அதற்குள் அந்தப் பகுதியில் அந்த நபர் தப்பியேடிவிட்டார்.

பணத்தை வாரி இறைத்த அந்த நபர் கேட் சூட் அணிந்தபடி நல்ல படித்தவர் பேன்று காணப்பட்டார். அவரது கழுத்தில் சுவரில் மாட்டும் கடிகாரம் ஒன்றும் தெங்கிக் கெண்டிருந்தது. மேம்பாலத்தின் இருபக்கமும் ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்துள்ளார். பாலத்தின் இரு பக்கங்களிலும் பணத்தை வாரி இறைத்த அந்த நபரை பேலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அவர் சுமார் ரூ.3000 வரை வாரி இறைத்திருந்கலாம் என்று கூறப்படுகிறது. திரைப்பட ஷூட்டிங்கிற்காக இதுபேன்று செய்யப்பட்டது என்றும் அந்தப் பகுதியில் இருந்தவர்கள் சிலர் பேலீசாரிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com