பெட்ரோல்-டீசல் விலை உயர்வு: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து உள்ளது
பெட்ரோல்-டீசல் விலை உயர்வு: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து உள்ளது. குறிப்பாக ஒரே வாரத்தில் 4-வது முறையாக விலை அதிகரித்து இருக்கிறது.

டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85.70-க்கும், மும்பையில் ரூ.92.28-க்கும் விற்கப்படுகிறது. இதைப்போல நேற்று டீசல் விலையும் லிட்டர் ஒன்றுக்கு டெல்லியில் ரூ.75.88-க்கும், மும்பையில் ரூ.82.66-க்கும் விற்பனையானது. இந்த விலை அதிகரிப்பால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

இந்த விலை உயர்வு தொடர்பாக மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, கியாஸ், டீசல் மற்றும் பெட்ரோல் விலையில் மோடிஜி மிகப்பெரிய வளர்ச்சியை கொண்டு வந்துள்ளார். விலைவாசி உயர்வால் மக்கள் துன்பப்படுகின்றனர். ஆனால் மோடி அரசோ, வரி வசூலில் தீவிரமாக இருக்கிறது என்று குறிப்பிட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com