பொக்ரானில் ராணுவ ஒத்திகைப் பயிற்சி: பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டார்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மட்டுமின்றி இந்தியாவிலேயே முழுவதும் தயாரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களின் ராணுவ ஆயுதங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
பொக்ரானில் ராணுவ ஒத்திகைப் பயிற்சி: பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டார்
Published on

ஜோத்பூர், 

ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இன்று 'பாரத் ஷக்தி' என்ற உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து முப்படைகளின் ஒத்திகைப் பயிற்சியும் நடத்தப்பட்டது. 50 நிமிடங்கள் இந்த பயிற்சி நடைபெற்றது. இந்த ஒத்திகையை பிரதமர் மோடி நேரில் சென்று பார்வையிட்டார். மோடியுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே ஆகியோரும் பயிற்சியை பார்வையிட்டனர். அதோடு,  40 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் பார்வையிட்டனர்.

கடற்படை ஏவுகணைகள், விமானப்படை தேஜஸ் இலகுரக போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள், டேங்கர்கள் உள்பட பல்வேறு ராணுவ உபகரணங்களும் இந்த ஒத்திகையின் போது காட்சிப்படுத்தப்பட்டன. துல்லியமான வழிகாட்டும் ஏவுகணை, தகவல் தொழில்நுட்ப அமைப்பு, தானியங்கி ஸ்பெக்ட்ரம் கண்காணிப்பு அமைப்பு போன்ற மேலும் சில புது தொழில்நுட்பங்களும் பரிசோதிக்கப்பட்டன. அதேபோல், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், சரக்கு கப்பல்கள் மற்றும் வான்வழியில் இலக்குகளை தாக்கும் விமானங்கள், இலகுரக ஹெலிகாப்டர்கள் இந்த ஒத்திகையில் காட்சிப்படுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com