

புதுடெல்லி
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலாகேட்டிலுள்ள பயங்கரவாத முகாம் மீது இந்திய விமானங்கள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி விமானம் மூலம் குண்டுவீசி தாக்குதல் நடத்தின.
இந்த சம்பவம் நடைபெற்று இன்றுடன் ஓராண்டு ஆவதையெட்டி டுவிட்டரில் ராஜ்நாத் வெளியிட்ட பதிவுகளில், பயங்கரவாதம் தெடர்பான அணுகுமுறையிலும், பதிலடி கெடுக்கும் முறையிலும் மேடி தலைமையிலான அரசு மாற்றத்தை கெண்டுவந்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாற்றத்துக்கு துல்லியத் தாக்குதல், பாலாகேட் தாக்குதல் ஆகியவையே சான்று என்று கூறியுள்ள அவர், நாட்டை பாதுகாக்க எல்லை தாண்டி சென்று தாக்குதல் நடத்த பாதுகாப்புப் படைகள் தயங்குவதில்லை எனவும் கூறியுள்ளார்.