மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்ரே இன்று அயோத்தி பயணம்

சிவசேனா தலைமையிலான அரசின் 100 நாட்கள் ஆட்சியை தொடர்ந்து, அயோத்தி சென்று ராமரை வழிபட இருப்பதாக உத்தவ் தாக்ரே தெரிவித்து உள்ளார்.
மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்ரே இன்று அயோத்தி பயணம்
Published on

மும்பை,

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே இன்று அயோத்தி செல்கிறார். சிவசேனா தலைமையிலான அரசின் 100 நாட்கள் ஆட்சியை தொடர்ந்து, அயோத்தி சென்று ராமரை வழிபட இருப்பதாக அவர் தெரிவித்து இருந்தார்.

சிவசேனா தொண்டர்கள் அயோத்தி செல்ல வசதியாக சிறப்பு ரெயில் நேற்று முன் தினம் மும்பையில் இருந்து தானே வழியாக உத்தரபிரதேசத்துக்கு புறப்பட்டு சென்றது. பகல் 2 மணியளவில் எல்.டி.டி.யில் இருந்து சிறப்பு ரெயில் புறப்பட்டது.

இந்த ரெயில் நேற்று அயோத்தி சென்றடைந்தது. இந்த ரெயில் மறுமார்க்கத்தில் இன்று இரவு 11.20 மணிக்கு அயோத்தியில் இருந்து புறப்பட்டு 9-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு எல்.டி.டி. வந்தடைகிறது. முன்னதாக நேற்று முன் தினம் மும்பையில் இருந்து அயோத்தி சென்ற சிறப்பு ரெயிலில் திரளான சிவசேனா தொண்டர்கள் சென்றனர்.

இதற்கிடையே, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, சராயு நதிக்கரையில் நடைபெறும் ஆரத்தி வழிபாட்டில் கலந்து கொள்வதை உத்தவ் தாக்ரே தவிர்த்து விடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் அதிக அளவில் கூடக்கூடாது என்ற சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலை ஏற்று, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிவசேனா தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com