

புதுடெல்லி,
உயர்கல்வி நிறுவனங்களை பன்முகத் தன்மை கொண்ட உயர்கல்வி நிலையங்களாக மாற்ற பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரை செய்துள்ளது.
தேசிய கல்வி கொள்கை அடிப்படையில், உயர்கல்வி நிறுவனங்களை பன்முகத் தன்மை கொண்ட உயர்கல்வி நிலையங்களாக மாற்ற யூ.ஜி.சி. முக்கியத்துவம் அளிக்கிறது.
இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு பல்கலைக்கழகம் மானியக்குழு கடிதம் அனுப்பியுள்ளது.