உ.பி: கான்பூர் மாவட்டத்தில் பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் கவிழ்ந்து விபத்து: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் கடம்பூர் பகுதியில் பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் கவிழ்ந்ததில் 26 பேர் உயிரிழந்தனர்.
உ.பி: கான்பூர் மாவட்டத்தில் பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் கவிழ்ந்து விபத்து: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு!
Published on

கான்பூர்,

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள கடம்பூர் பகுதியில் பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் கவிழ்ந்ததில் 26 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர்.

பதேபுராவில் உள்ள சண்டிகா தேவி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு, நேற்று அங்கிருந்து பக்தர்கள் டிராக்டர் ஒன்றில் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் அஹிர்வான் மேம்பாலத்தில் வேகமாக வந்த லாரி ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோதியது.

டிராக்டர் கவிழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே பலர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.இது குறித்து தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் அதிகாரிகள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.அஹிர்வான் மேம்பாலத்தில் நேற்று இரவு இந்த விபத்து நடைற்றுள்ளது

போலீஸ் தரப்பில் கூறுகையில், மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன.இந்த விபத்தில் மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஹாலட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விசாரணை நடந்து வருகிறது என்றனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் 26 உடல்களுக்கும் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டன என்று கான்பூர் மாவட்ட கலெக்டர் இன்று காலை தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com