வசதியானவர்கள் வாங்குவதற்காக தடுப்பூசிகளை வெளிச்சந்தையில் விற்க வேண்டும்

வசதியானவர்கள் வாங்குவதற்காக தடுப்பூசிகளை வெளிச்சந்தையில் விற்க வேண்டும் பிரதமர் மோடிக்கு நவீன் பட்நாயக் கடிதம்.
வசதியானவர்கள் வாங்குவதற்காக தடுப்பூசிகளை வெளிச்சந்தையில் விற்க வேண்டும்
Published on

புவனேஸ்வர்,

பிரதமர் மோடிக்கு ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கொரோனா தடுப்பூசிகளை வெளிச்சந்தையில் விற்க அனுமதிக்க வேண்டும். அதை வசதியானவர்கள் வாங்கிக் கொள்வார்கள். அதன்மூலம், நலிந்த பிரிவினருக்கு தடுப்பூசி கிடைக்கச் செய்வதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த முடியும்.

அதுபோல், நம்பகமான நிறுவனங்களால் சர்வதேச அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை இந்தியாவில் பயன்படுத்த ஒப்புதல் அளிக்க வேண்டும்.

அதிக பாதிப்பு நிறைந்த பெருநகரங்களுக்கு முன்னுரிமை அளிப்பதுடன், வயதுவரம்பை தளர்த்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com