சட்டசபையில் பா.ஜனதா எம்.எல்.ஏக்கள் செய்த செயல்...! இணையத்தில் வைரலாகும் வீடியோ

உத்தரபிரதேச சட்டசபையில் பா.ஜனதா எம்.எல்.ஏக்கள் செய்த அட்டூழியம் இணையத்தில் வைரலாகி உள்ளது.
சட்டசபையில் பா.ஜனதா எம்.எல்.ஏக்கள் செய்த செயல்...! இணையத்தில் வைரலாகும் வீடியோ
Published on

லக்னோ

உத்தரப் பிரதேச மாநில சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று நடைபெற்றது. கூட்டத்தின்போது, இரண்டு எம்.எல்.ஏக்கள் செய்த காரியம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சபை நடவடிக்கையின்போது, பா.ஜனதா எம்.எல்.ஏ. ராகேஷ் கோஸ்வாமி மொபைலில் ஆன்லைன் ரம்மி கேம் விளையாடிக் கொண்டிருந்தார். மற்றொருவர், தனது கையில் புகையிலையை கொட்டி வாயில் போட்டு மென்றுக் கொண்டிருந்தார்.

இந்த இரண்டு வீடியோவையும் சமாஜ்வாடி கட்சி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவுடன், "சபையின் கண்ணியத்தை கெடுக்கும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள்! என்று குறிப்பிட்டிருந்தது.

மேலும், அத்துடன் மஹோபாவைச் சேர்ந்த எம்.எல்.ஏ. சபையில் மொபைல் கேம் விளையாடுகிறார். ஜான்சியின் பா.ஜனதா எம்.எல்.ஏ. புகையிலை சாப்பிடுகிறார். இவர்களிடம் மக்களின் பிரச்சினைகளுக்கு பதில் இல்லை. சட்டப்பேரவையை பொழுது போக்கு இடமாக வைத்துள்ளனர்.

இவர்களின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் வெட்கக்கேடானது!" என்று பதிவிட்டுள்ளது. இந்நிலையில், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் இரண்டு எம்.எல்.ஏ.க்களின் செயலை விமர்சித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com