மெட்ரோ ரெயிலில் கவர்ச்சி நடனம் ஆடிய இளம்பெண்

டெல்லி மெட்ரோ ரெயிலில் இளம்பெண் ஒருவர் கவர்ச்சியாக நடனம் ஆடும் காட்சிகள் பயனர்களை முகம் சுழிக்க வைத்தது.
மெட்ரோ ரெயிலில் கவர்ச்சி நடனம் ஆடிய இளம்பெண்
Published on

புதுடெல்லி,

டெல்லியில் மக்களின் பிரதான போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரெயிலில் வித்தியாசமான சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாகி வருகிறது. இளம்பெண்கள் கவர்ச்சி உடையில் வருவது, இளம்ஜோடிகளின் அத்துமீறல் என பல வீடியோக்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாகி விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்தது.

இதைத்தொடர்ந்து. பொது இடங்களில் அத்துமீறும் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் எச்சரித்து இருந்தது. ஆனாலும் பயணிகளின் அத்துமீறல் நின்றபாடில்லை. தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், டெல்லி மெட்ரோ ரெயிலில் இளம்பெண் ஒருவர் கவர்ச்சியாக நடனம் ஆடும் காட்சிகள் பயனர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்த வீடியோவில் இளம்பெண் ஒருவர் கவர்ச்சி உடை அணிந்து ஆபாசமாக நடனம் ஆடுவது போன்று காட்சிகள் உள்ளன. இந்த காட்சிகள் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் அந்த பெண்ணை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டனர். இதுபோன்ற சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு நின்றுவிடக்கூடாது. அவர்கள் மீது சட்டப்பூர்வமாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயனர்கள் சிலர் பதிவிட்டனர். இதைத்தொடர்ந்து மெட்ரோ நிர்வாகமும் விசாரணை நடத்தி வருகிறது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com