

மும்பை,
விவேக் ஓபராயின் நிறுவனமான கர்ம் இன்ப்ராஸ்டக்சர் பிரைவேட் லிமிடெட், நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த ஆப்ரேஷன்களில் வீரமரணம் அடைந்த 25 சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்திற்கு பிளாட் வழங்கப்படுவது தொடர்பாக கடிதம் எழுதி உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது. 4 பிளாட்கள் ஏற்கனவே உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள பிளாட்கள் விரைவில் பயனாளர்களிடம் கொடுக்கப்படும். முன்னதாக இந்தி நடிகர் அக்ஷய் குமார் உயிர்நீத்த 12 வீரர்களின் குடும்பத்திற்கு ரூ. 1.08 கோடி வழங்கியிருந்தார்.
கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி சத்தீஷ்கார் மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்தாரும் பயனாளர் பட்டியலில் அடங்குவார்கள்.