

புதுடெல்லி,
பிரதமர் நரேந்திரமோடி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
2022-ம் ஆண்டின் முதலாவது மனதின் குரல் நிகழ்ச்சி வருகிற 30-ந் தேதி நடைபெறுகிறது. ஊக்கமளிக்கும் வாழ்க்கை நிகழ்வுகள் மற்றும் தலைப்புகளில் பகிர்ந்து கொள்வதற்கு உங்களிடம் ஏராளமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
அவற்றை @mygovindia அல்லது நமோ செயலியில் பகிருங்கள். 1800-11-7800 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும் உங்களின் தகவலை பதிவு செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.