கம்பத்தில் ஏற்றும்போது சோனியா கைகளில் கழன்று விழுந்த காங்கிரஸ் கொடி..! - நிர்வாகிகள் அதிர்ச்சி

காங்கிரஸ் கட்சியின் 137வது ஆண்டு விழாவையொட்டி, கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றும்போது சோனியா கைகளில் அது கழன்று விழுந்ததால் நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கம்பத்தில் ஏற்றும்போது சோனியா கைகளில் கழன்று விழுந்த காங்கிரஸ் கொடி..! - நிர்வாகிகள் அதிர்ச்சி
Published on

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சி தோற்றுவிக்கப்பட்டதன் 137-வதுஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் அலுவலகங்களில் நடைபெறுகிறது. இதன்படி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் 137வது ஆண்டு கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் டெல்லியில் கட்சி அலுவலகத்தில் இன்று காலை கட்சிக் கொடி ஏற்ற காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி வருகை தந்தார். அப்போது அந்த இடத்தில் வெள்ளை நிற கதர் உடுப்பில், சட்டையில் கட்சிக் கொடி தாங்கி ஏராளமான தொண்டர்கள் கொடி வணக்கம் செலுத்த அணிவகுத்திருந்தனர்.

அப்போது கொடி சரியாக ஏறவில்லை. இதையடுத்து அருகில் இருந்தவர் கொடியை சரியாக பறக்க விட முயற்சித்து வேகமாக இழுத்தார். ஆனால் கொடி பறக்காமல் பொத்தென்று அவரது கையிலேயே வந்து விழுந்தது

அப்போது, கட்சிக் கொடியை ஏற்ற சோனியா காந்தி முற்பட்டபோது கொடி சரியாக ஏறவில்லை. இதையடுத்து அருகில் இருந்தவர் கொடியை சரியாக பறக்க விட முயற்சித்து வேகமாக இழுத்தார். ஆனால் கொடி பறக்காமல் திடீரென கழன்று சோனியா காந்தியின் கரங்களில் விழுந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். அங்கு கூடியிருந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து கொடியை மீண்டும் சரியாக பறக்க விட தொண்டர்கள் முயற்சிகளை மேற்கொண்டனர்.

பின்னர் வழக்கம் போல் நிகழ்ச்சிகள் தொடங்கின. கட்சி கொடி கீழே விழுந்ததால் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சிறிது பரபரப்பு நிலவியது. இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com