

நாடு முழுவதும் பல இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் நிலவும் வெயிலின் தாக்கத்தை இளைஞர்கள் ஒருவர் ஆம்லட் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.
திட்லாகர் நகரில், வெயிலின் தாக்கத்தை கண்டுபிடிக்க வெயிலை கொண்டு ஆம்லெட் போட்டு அசத்தினர். ஒடிசாவின் திட்லாகர் மாவட்டத்தில் நேற்று 45.4 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தியது.வெயிலில் படும் படி பாத்திரத்தை வைத்து, சுமார் அரை மணி நேரம் கழித்து அந்த தட்டில் முட்டையை உடைத்து ஊற்றி அடுத்த அரை மணி நேரத்தில் ஆப்-பாயில் போட்டு காட்டினார்.