பாதயாத்திரையின் போது சோனியா காந்தியின் 'ஷூ லேசை' கட்டிவிட்ட ராகுல் காந்தி - வைரல் வீடியோ

இன்றைய பாதயாத்திரையில் ராகுல் காந்தியுடன் சோனியா காந்தியும் பங்கேற்றுள்ளார்.
Image Tweeted By @ShashiTharoor/ @INCIndia
Image Tweeted By @ShashiTharoor/ @INCIndia
Published on

பெங்களூரு,

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணத்தை கடந்த மாதம் 8-ம் தேதி முதல் மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை, கேரளா வழியாக தற்போது கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இன்று மண்டியா மாவட்டம் பாண்டவபுராவில் இருந்து ராகுல்காந்தி தனது பாதயாத்திரையை மீண்டும் தொடங்கினார். இன்றைய பாதயாத்திரையில் ராகுல் காந்தியுடன் சோனியா காந்தியும் பங்கேற்றுள்ளார். இன்று இருவரும் சேர்ந்து சில தூரம் நடந்தனர்.

அப்போது, சோனியா காந்தியின் ஷூ லேஸ் கழன்றதை அடுத்து, ராகுல் காந்தி உடனடியாக எவ்வித தயக்கமும் இன்றி அதனைக் கட்டிவிட்டார். இதனை உடன் இருந்த காங்கிரஸ் பிரமுகர்கள் வீடியோவாகவும், புகைப்படமாகவும் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com