கோதுமை ஏற்றுமதிக்கு தடை நடவடிக்கைக்கு பலன் - தட்டுப்பாடின்றி கிடைப்பதால் விலை வீழ்ச்சி!

கோதுமை மண்டியில் கோதுமையின் விலை உயர்ந்த நிலையில், விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோதுமை ஏற்றுமதிக்கு தடை நடவடிக்கைக்கு பலன் - தட்டுப்பாடின்றி கிடைப்பதால் விலை வீழ்ச்சி!
Published on

போபால்,

கோதுமை சேமிப்பு அங்காடிகளில் கோதுமைக்கான மொத்த கொள்முதல் விலை கணிசமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

உள்நாட்டில் உற்பத்தியாகும் கோதுமையை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதன் பயனாக கோதுமை விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாட்டின் முக்கிய கோதுமை சேமிப்புக்கிடங்கான மத்திய பிரதேசத்தின் இந்தூர் கோதுமை மண்டியில்,100 கிலோ கோதுமையின் விலை ரூபாய் 2500 வரை உயர்ந்த நிலையில் விலை சற்று குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் ரஷியா போர் காரணமாக கோதுமைக்கு உலக அளவில் தட்டுப்பாடு நிலவியது. 100 கிலோ கோதுமை விலை ரூபாய் இரண்டாயிரத்திலிருந்து ரூபாய் 2500 ஆக அதிகரித்தது. மேலும் இந்தியாவின் பல பகுதிகளில் வெப்ப அலை வீசியதன் காரணமாக கோதுமை உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இதனை அடுத்து கோதுமை ஏற்றுமதிக்கு தடை செய்தும் பல கட்டுப்பாடுகள் விதித்தும் அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில் இப்போது விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்திருந்த நிலையில் இப்போது கோதுமை மாவு மற்றும் மைதா ரவா போன்ற பொருட்களின் ஏற்றுமதிக்கும் பல கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com