மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது: பா.ஜனதா அணியில் நீடிப்போமா? என்று தெரியாது - சிவசேனா எம்.பி. சொல்கிறார்

மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது, பா.ஜனதா அணியில் நீடிப்போமா என்று தெரியாது என சிவசேனா எம்.பி. கூறினார்.
மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது: பா.ஜனதா அணியில் நீடிப்போமா? என்று தெரியாது - சிவசேனா எம்.பி. சொல்கிறார்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நேற்று விவாதம் நடந்தது. அதில், சிவசேனா எம்.பி. ஆனந்த்ராவ் அட்சுல் பேசியதாவது:-

மத்திய அரசு, பாராட்டத்தக்க பணிகளை செய்தபோதிலும், சில தவறுகளையும் செய்துள்ளது. பணமதிப்பு நீக்கம், பொருளாதாரத்துக்கு பலன் அளித்திருப்பதாக கூறுவதை ஏற்க முடியாது. அன்றாட தேவையை பூர்த்தி செய்ய யாரிடமும் பணம் இல்லை.

வாஜ்பாய், அத்வானி, பால் தாக்கரே ஆகியோர் தலைமை பொறுப்பில் இருந்தபோது, சிவசேனா மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது, பா.ஜனதா எங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. இன்று நாங்கள் பா.ஜனதா அணியில் இருக்கிறோம். நாளை நீடிப்போமா என்று சொல்ல முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com