

புதுடெல்லி,
ஏசு கிறிஸ்து பிறந்தநாளான இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி பிரதமர் மோடி, கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். கிறிஸ்துமஸ் விழாவில் ஏசுவின் போதனைகளை நினைவில் கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.