இந்து சர்க்கார் திரைப்படத்தை கண்டிக்கும் ’சஞ்சய் காந்தி மகள்’

தன்னை சஞ்சய் காந்தியின் மகள் என்று கூறிக்கொள்ளும் பிரியாபால் சிங் எனும் பெண் ‘இந்து சர்க்கார்’ படத்தை கண்டித்துள்ளார்.
இந்து சர்க்கார் திரைப்படத்தை கண்டிக்கும் ’சஞ்சய் காந்தி மகள்’
Published on

புது டெல்லி

டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் மனு அளித்துள்ள அவர் தனது தத்து ஆவணங்கள் போலியானவை என்றும் தன்னை படத்தில் தவறாக சித்தரித்துள்ளதாகவும், இதனால் தனது மௌனத்தைக் கலைத்து நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் கூறினார்.

இந்திரா காந்தியின் இரண்டாவது மகனான சஞ்சய் காந்தியின் திருமணத்திற்கு முன்பாகவே பிறந்ததாக கூறிக்கொள்ளும் 48 வயதாகும் பிரியா சென்ற மாதம் திரைப்பட தணிக்கை வாரியத்தை அணுகுகியதாகவும் கூறினார்.

படத்தை எடுத்தவர்கள் 30 சதவீத உண்மையும், 70 சதவீத கற்பனையும் கலந்துள்ளதாகவும் அந்த 30 சதவீத உண்மையே கற்பனைக்கு வழிவிட்டுள்ளன. இது பார்வையாளர்களை தெளிவாக ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது என்று நினைக்க வைக்க செய்யப்பட்டுள்ளது. தனக்கு ஊடக புகழ் தேவையில்லை. ஆனால் தனது தந்தையைப் பற்றி தவறான பார்வை உருவாக்கப்படுகிறது என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

சஞ்சய்யின் நண்பர் என்று கூறிக்கொள்ளும் கோஸ்வாமி சுஷில்ஜி மகராஜ் என்பவர் சஞ்சய்க்கு ஒரு பெண் குழந்தை இருப்பது நன்கு தெரியும் என்று கூறி பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

தான் குழந்தையாக இருந்தபோதே தத்துக் கொடுக்கப்பட்டாலும் வளர்ந்த பிறகு சஞ்சய் காந்தியே அவரது மரபணுபடியான தந்தை என்கிறார் பிரியா.

ஆனால் படத்தின் இயக்குநர் மதுர்பண்டார்கர் ஜுலை 28 ஆம் தேதி படம் வெளிவருகிறது என்றும் படம் எந்த செய்திகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதோ அதைப் பற்றி யாரும் கேள்வி கேட்பதில்லை என்று குற்றஞ்சாட்டினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com