பீகாரில் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் 15 பேர் கைது

பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள தாமோதர்பூர் கிராமத்தைச் சேர்ந்த விமலேஷ் ஷா (வயது 19) என்ற வாலிபர் நேற்று முன்தினம் பிகியா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரெயில் தண்டவாளத்தையொட்டி பிணமாக கிடந்தார்.
பீகாரில் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் 15 பேர் கைது
Published on

பாட்னா,

சிகப்பு விளக்குப் பகுதியில் வசிக்கும் ஒரு பெண் அவரை கழுத்தை நெரித்துக் கொன்று தண்டவாளம் அருகே போட்டுவிட்டதாக தாமோதர்பூர் கிராமவாசிகள் சந்தேகித்தனர். அங்கு விரைந்த அவர்கள் ஷாவின் மரணத்துக்கு காரணம் என்று சந்தேகப்பட்ட பெண்ணை தரதரவென்று வீதிக்கு இழுத்து வந்தனர். பின்னர் அவரை நிர்வாணமாக்கி, அடித்து உதைத்தவாறே தெருத் தெருவாக நடக்கவிட்டனர். அங்குள்ள பல கடைகளுக்கும் தீ வைத்தனர். ரெயில்கள் மீது கற்களையும் வீசி தாக்குதலும் நடத்தினர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும், பிகியா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது தாமோதர்பூர் கிராமவாசிகள் போலீசாருடன் தகராறில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தை கலைக்க முயன்றனர். பதிலுக்கு கிராமவாசிகளும் போலீசாரை நோக்கி சில ரவுண்டுகள் சுட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதைத்தொடர்ந்து சம்பவ நடந்த பகுதிக்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிந்து 15 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com