ஒடிசாவில் முதல் மந்திரி மீது முட்டைகள் வீசிய பெண் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதி

ஒடிசாவில் முதல் மந்திரி பட்நாயக் மீது முட்டைகளை வீசிய பெண் உடல்நல குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
ஒடிசாவில் முதல் மந்திரி மீது முட்டைகள் வீசிய பெண் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதி
Published on

பலசோர்,

ஒடிசாவில் பலசோர் மாவட்டத்தில் தலசரி பகுதியில் கடந்த ஜனவரி 31ந்தேதி பொது கூட்டம் ஒன்றில் முதல் மந்திரி நவீன் பட்நாயக் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் அவர் மீது பெண் ஒருவர் முட்டைகளை வீசினார். அவரை போலீசார் கைது செய்து ஜலேஸ்வர் நகர நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்படுத்தினர். அவரை பிப்ரவரி 8ந்தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

அவருக்கு சிறையில் உடல்நல குறைவு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து கட்டாக் நகரில் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். சிறை காவலில் இருந்த பெண்ணுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது என பாரதீய ஜனதா பொது செயலாளர் லேக்ஸ்ரீ சமந்த்சிங்கார் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com