

இது 6.78 அங்குல ஓலெட் திரையைக் கொண்டது. இதில் ஆக்டாகோர் ஸ்நாப் டிராகன் 8-வது தலைமுறை பிராசஸர் பயன்படுத்தப் பட்டுள்ளது. 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் கொண்டது. ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் உடையது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது.
பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 32 மெகா பிக்ஸெல் கேமராவும் கொண்டது. இதன் எடை 239 கிராம். இதில் 6 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. கருப்பு, வெள்ளை நிறங்களில் வந்துள்ள இந்த மாடலின் விலை சுமார் ரூ.74,999.