குழந்தைகளைக் கவரும் கடிகாரம்

நாய்ஸ் நிறுவனம் சிறுவர்களைக் கவரும் வகையிலான ஸ்மார்ட் கடிகாரத்தைத் தயாரித்து அறிமுகம் செய்துள்ளது.
குழந்தைகளைக் கவரும் கடிகாரம்
Published on

ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் நாய்ஸ் நிறுவனம் சிறுவர்களைக் கவரும் வகையிலான ஸ்மார்ட் கடிகாரத்தைத் தயாரித்து அறிமுகம் செய்துள்ளது. இதில் உள்ள பேட்டரி 3 நாட்கள் வரை செயல்படும் திறன் கொண்டது. தண்ணீர் மற்றும் தூசு புகாத வகையில் வடிவமைக்கப்பட்டது. 1.4 அங்குல திரை, அலாரம், ஸ்டாப் வாட்ச் , டைமர், கால்குலேட்டர் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது.

இதில் 2 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா உள்ளது. இது குழந்தை கள் புகைப்படம் எடுத்துக்கொள்ள உதவும். பெற்றோர்கள் முக்கியமான தொலைபேசி எண்களை இதில் பதிவு செய்ய முடியும். இதற்கு நாய்ஸ் அமிகோ என்ற செயலி துணைபுரியும்.

கண்கவர் வண்ணங்களில் வந்துள்ள இந்த ஸ்மார்ட் கடிகாரத்தின் விலை சுமார் ரூ.5,999.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com