வெப்பத்தால் மீன்கள் சின்னதாகின்றன...

அதிகரிக்கும் வெப்பத்தால் மீன்களின் வளர்ச்சியும் பாதிக்கப்படுவதை ‘குளோபல் சேஞ் பயாலஜி’ என்ற அறிவியல் ஆய்விதழின் கட்டுரை சுட்டிக்காட்டியுள்ளது.
வெப்பத்தால் மீன்கள் சின்னதாகின்றன...
Published on

வீட்டிலும், ஓட்டலிலும் நம் பிளேட்டில் வைக்கப்படும் மீன்கள், வருங்காலத்தில் இன்னும் சின்னதாகும் வாய்ப்பை உலக வெப்பமயமாதல் (குளோபல் வார்மிங்) ஏற்படுத்தியுள்ளது. அதிகரிக்கும் வெப்பத்தால் மீன்களின் வளர்ச்சியும் பாதிக்கப்படுவதை 'குளோபல் சேஞ் பயாலஜி' என்ற அறிவியல் ஆய்விதழின் கட்டுரை சுட்டிக்காட்டியுள்ளது.

"கடல்நீர் வெப்பமாவதால், குளிர் ரத்தம் கொண்ட மீன்களுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் வளர்சிதை மாற்றம் குறைந்து 30 சதவிகிதம் அதன் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு உடல் சுருங்கிப் போகிறது" என்கிறார், பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக இயக்குநரான வில்லியம் சங்.

இங்கிலாந்தில் ஹடாக், சோல், டுனா ஆகிய மீன் வகைகளின் உடல் அளவும் சிறியதாகியுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

"ஆக்சிஜன் குறைவு மீன்களைக் கொல்லாது, ஆனால் வளர்ச்சியை பாதிக்கும். பெரிய மீன்கள் சிறிய மீன்களை இரையாகக் கொள்ளும் என்பதால், வெப்பநிலை உயர்வு உணவுச்சங்கிலியையே மாற்றிவிட்டது" என கவலைப்படுகிறார் ஆராய்ச்சிகுழுவைச் சேர்ந்தவரான டேனியல் பாலி.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com