கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்: இதுவரை 1.54 கோடி விண்ணப்பங்கள்

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் இதுவரை 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்: இதுவரை 1.54 கோடி விண்ணப்பங்கள்
Published on

சென்னை,

பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் முக்கிய பணிகள் வேகமெடுத்துள்ளன. இரண்டு கட்டங்களாக நடைபெற்ற முகாம்களில் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யாதவர்களுக்காக சிறப்பு முகாம்கள் ஆகஸ்ட் 18, 19, 20 ஆகிய மூன்று தேதிகளில் நடைபெற உள்ளது.

செப்டம்பர் 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைக்கும் நிலையில் அன்றைய தினமே தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி பயனாளர்களுக்கும் அவர்களது வங்கிக் கணக்கில் 1000 ரூபாய் வரவு வைக்கப்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ள நிலையில் விரைவாக பணிகளை முடிக்க அதிகாரிகள் முனைப்பு காட்டி வருகின்றனர்.

இந்தநிலையில், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் இதுவரை 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் இத்திட்டத்தில் பதிவு செய்யாதவர்களுக்காக நாளை முதல் வரும் 20ம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

ஜூலை 24-4-ம் தேதி வரை முதற்கட்டமும் ஆகஸ்ட் 5-14-ம் தேதி வரை 2-ம் கட்ட முகாமும் நடைபெற்றன. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட நபர்கள் நாளை முதல் 3 நாட்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com