கஞ்சா விற்ற 10 பேர் கைது

எரியோடு பகுதியில் கஞ்சா விற்ற 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா விற்ற 10 பேர் கைது
Published on

எரியோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலீசார், எரியோடு நால்ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கஞ்சா பொட்டலங்களுடன் சுற்றித்திரிந்த 10 பேரை பிடித்து, எரியோடு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர். விசாரணையில் இவர்கள் வேடசந்தூரை சேர்ந்த சிவா (வயது 23), ரஞ்சித் (20), பாலா (21), ராபர்ட் (24), வடமதுரையை சேர்ந்த மாரி (23), சபரி (19), ஜெயசூர்யா (23), திண்டுக்கல்லை சேர்ந்த கிருஷ்னகுமார் (26), தேவகவுண்டன்பட்டியை சேர்ந்த விக்கி (23), மோர்பட்டியை சேர்ந்த பிரவீன் (23) என்று தெரியவந்தது.

வேடசந்தூர், எரியோடு, வடமதுரை ஆகிய பகுதிகளில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இவர்கள் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 பேரையும் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com