11 வயது சிறுவன் பலியான விவகாரம்: நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் இனி செயல்படாது

11 வயது சிறுவன் பலியான விவகாரம்: நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் இனி செயல்படாது மதுரை ஐகோர்ட்டில் தகவல்.
11 வயது சிறுவன் பலியான விவகாரம்: நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் இனி செயல்படாது
Published on

மதுரை,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச்சேர்ந்த கவிவர்மன் என்ற சுரேஷ் கண்ணா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், கடந்த மாதம் 30-ந்தேதி புதுக்கோட்டை நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் இருந்து வந்த துப்பாக்கி குண்டு பாய்ந்து 11 வயது சிறுவன் உயிரிழந்தான். இதுபோன்ற சக்திவாய்ந்த துப்பாக்கிகளை பயன்படுத்திய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை மூடவும் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, ஸ்ரீமதி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, சம்பவம் நடந்த அன்றே, நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் மூடப்பட்டது. இனி இந்த தளம் பயன்படுத்தப்படமாட்டாது என உறுதி அளித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com