125 பேருக்கு அரிசி மூட்டை, மளிகை பொருட்கள்

125 பேருக்கு அரிசி மூட்டை, மளிகை பொருட்களை பேரூராட்சி கவுன்சிலர் வழங்கினா.
125 பேருக்கு அரிசி மூட்டை, மளிகை பொருட்கள்
Published on

நாட்டறம்பள்ளி பேரூராட்சி 14-வது வார்டு உறுப்பினரும், பாரதிய ஜனதா கட்சி பிரமுகருமான இல.குருசேவ் சார்பில் இந்தியாவின் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அதிபெரமனூரில் நடந்தது. இதில் ஏழை, எளிய மக்கள் மற்றும் ஆதரவற்றோர்கள் என 125 பேருக்கு தலா 26 கிலோ எடையுள்ள அரிசி மூட்டை, ரூ.1,000 மதிப்பிலான 25 வகையான மளிகை பொருட்கள் என மொத்தம் ரூ.3 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை இல.குருசேவ் வழங்கினார். அப்போது இந்தியா எவ்வாறு சுதந்திரம் பெற்றது என்பது குறித்தும், குடியரசு தினம் கொண்டாப்படுவதன் நோக்கம் குறித்தும் பொதுமக்களிடம் விளக்கி பேசினார். நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள், வாரி அகர்பத்தி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com