சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் 21 கிலோ கஞ்சா பறிமுதல்

ரெயில் பெட்டிகளில் ரெயில்வே பாதுகாப்புப்படையினர் சோதனை நடத்தினர்.
சென்னை
தெலுங்கானாவின் காச்சிகுடாவில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் எக்பிரஸ் ரெயில் நேற்று சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தின் 8வது நடைமேடைக்கு வந்தது. அதில் இருந்து பயணிகள் இறங்கினர். அப்போது ரெயில் பெட்டிகளில் ரெயில்வே பாதுகாப்புப்படையினர் சோதனை நடத்தினர்.
அப்போது, ரெயில் பெட்டியில் சந்தேகத்திற்கு இடமாக 2 பைகள் கிடந்தன. அந்த பைகளை சோதனை செய்தபோது அதில் 21 கிலோ கஞ்சா இருந்தது. இதையடுத்து, கஞ்சாவை ரெயில்வே பாதுகாப்புப்படையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 10 லட்சம் ஆகும்.
இதையடுத்து, கஞ்சா மதுவிலக்கு அமலாக்கப்பிர்வு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த நபர் யார்? என்பது குறித்து ரெயில்வே பாதுகாப்புப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






