நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி 22-ந்தேதி திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி 22-ந்தேதி திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்.
நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி 22-ந்தேதி திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்
Published on

சென்னை,

திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் ஒரு போட்டி அரசு நடத்திடும் கவர்னர் ஆர்.என்.ரவி, நான் நீட் தேர்வு ரத்து சட்டத்திற்கு கையெழுத்து போடமாட்டேன் என்று தனக்கு இல்லாத அதிகாரத்தை கூறி, தமிழ்நாட்டு மக்களை, தமிழ்நாடு அரசை நாளும் வீண் வம்புக்கு இழுக்கிறார். எடப்பாடி அணியினர் பா.ஜ.க.விடம் கட்சியை அடகு வைத்துவிட்டனர்.

இவற்றை மக்களுக்கு விளக்கிடவும், மருத்துவக்கல்வி உரிமையை நிலை நாட்டிடவும், இரட்டை வேடத்தை அம்பலப்படுத்திடவும், திராவிட மாணவர் கழகம், இளைஞரணி சார்பில் ஒவ்வொரு மாவட்டத்தின் முக்கிய இடங்களில், கிராமங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் 22-ந்தேதி நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com