தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு சொந்த நிதியில் இருந்து ரூ.5 லட்சம்; முதல்-அமைச்சர் வழங்கினார்

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.5 லட்சத்துக்கான காசோலை வழங்கினார்.
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு சொந்த நிதியில் இருந்து ரூ.5 லட்சம்; முதல்-அமைச்சர் வழங்கினார்
Published on

சென்னை,

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் தமிழ்நாட்டை விளையாட்டின் தலைநகராக மாற்றவேண்டும் என்ற லட்சியத்தோடு, மாநிலத்தில் அதிநவீன விளையாட்டு உட்கட்டமைப்பு மற்றும் விளையாட்டு வசதிகளை ஏற்படுத்தவும், விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் விளையாட்டு சூழலை உருவாக்கிடவும், அரசுக்கும், பங்குதாரர்களுக்கும் இடையில் தடையற்ற ஒருங்கிணைப்பை அடைவதற்கும், பெருநிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளர்களிடம் இருந்து பெறக்கூடிய நன்மைகளை பயன்படுத்துவதற்கும், "தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை" என்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் கடந்த 8-ந் தேதியன்று தொடங்கிவைக்கப்பட்டது.

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் உருவாக்கம், உறுப்பினர்கள் மற்றும் இயக்குனர் குழுவின் செயல்பாடுகள் ஆகியவை தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம்

இந்த அறக்கட்டளை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தலைவராகவும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளரை துணை தலைவராகவும் கொண்ட 7 பேர் அடங்கிய நிர்வாக குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக நடைமுறைகளை சிறப்பாக செயல்படுத்துவதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு தனது சொந்த நிதியில் இருந்து ரூ.5 லட்சத்துக்கான காசோலையினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று வழங்கினார்.

கலந்துகொண்டோர்

இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com