

சேலம்,
கொரோனா சிகிச்சைக்காக ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட சிகிச்சை மையங்களை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. அந்த வகையில் சேலம் அருகே இரும்பு ஆலையில் கூடுதலாக 500 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறக்க, வரும் 12 ஆம் தேதி முதல்-அமைச்சர் ஸ்டாலின் சேலத்திற்கு வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது சேலம் இரும்பு ஆலையில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் ஆக்சிஜன் படுக்கைகளை மக்கள் பயன்பாட்டிற்காக முதல்-அமைச்சர் ஸ்டாலின் திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.